தனியாரல் அடைக்கப்பட்ட நகராட்சி சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

மயிலாடுதுறையில் சாலையை அடைத்து அமைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் பார் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பாஜக மாவட்ட துணைத் தலைவரின் புகாரின்பேரில் ஒரு வாரத்தில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
மயிலாடுதுறை பஜனைமடத் தெரு அருகே உள்ள சந்தில் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இதற்காக அந்த வழியாக பழைய ஸ்டேட் வங்கிக்கு செல்லும் சாலையை குறுக்கே தடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அப்பகுதி அங்கீகரிக்கப்படாத பாராக செயல்பட்டு வந்தது. டாஸ்மாக் மதுபானக் கடை பயன்பாட்டுக்காக ஆக்கிரமிக்கப்பட்ட இந்த சந்தினை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையருக்கு பாஜக மாவட்ட துணைத் தலைவர் மோடி.கண்ணன் என்பவர் கடந்த 21-ஆம் தேதி ஆன்லைன் மூலமாக புகார் அனுப்பினார். இந்நிலையில், நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் தனராஜ் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பஜனைமடத்தெரு சந்தில் டாஸ்மாக் இயங்கும் இடத்தில் சாலை அடைத்து வைக்கப்பட்டிருந்த மதுபான கூட ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் முழுமையாக அகற்றினர்.
Next Story