யார் அரசியலுக்கு வந்தாலும் கவலை இல்லை மக்கள் எங்கள் பக்கம் தான் உள்ளர்கள் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பொள்ளாச்சியில் பேட்டி.,
Pollachi King 24x7 |3 Sep 2024 6:46 AM GMT
யார் அரசியலுக்கு வந்தாலும் கவலை இல்லை மக்கள் எங்கள் பக்கம் தான் உள்ளர்கள் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பொள்ளாச்சியில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேட்டி.,
யார் அரசியலுக்கு வந்தாலும் கவலை இல்லை மக்கள் எங்கள் பக்கம் தான் உள்ளர்கள் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பொள்ளாச்சியில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேட்டி., பொள்ளாச்சி., செப்டம்பர்.,03 திருப்பூர் தெற்கு மாவட்டம் ஒருங்கிணைந்த பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது., மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர், கிளைச் செயலாளர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்., இந்த கூட்டத்தின் போது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு எவ்வாறு களப்பணி ஆற்ற வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது., கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதனிடம் நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்கையில் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கினாலும் எங்களுக்கு ஆட்சேபனையும் இல்லை, வருத்தமும் இல்லை அதே நேரத்தில் திமுகவிற்கு கூடுதலான வாக்குகள் கிடைத்து வருகிறது கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய முதல்வர் கரத்தை வலுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் குறிப்பாக பெண்களுக்கு மத்தியில் அன்பை பெற்றுள்ளது திமுக கூட்டணிக்கு வாக்களிக்க தயாராக உள்ளார்கள் எனவே எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை மக்கள் எங்கள் பக்கம் உள்ளார்கள் என தெரிவித்தார்., பேட்டி..மு. பெ.சாமிநாதனிடம்., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்.,
Next Story