பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்
Mayiladuthurai King 24x7 |3 Sep 2024 1:10 PM GMT
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பாக பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு வாகன பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பங்கேற்று பெண்குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டு பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளை கற்பிப்போம் விழிப்புணர்வு வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இநத் வாகனம் மூலம் பெண்கல்வியை ஊக்குவிக்கு புதுமைப்பெண் திட்டம், அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மதிவண்டிகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், குழந்தை திருமணம் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1098, 1091, 181 ஆகிய எண்களுக்கு புகார் தெரிவிக்க வேண்டும், என்று விழிப்புணர்வு பிரச்சாரம் மெற்கொள்ளபட்டு வருகிறது. இதில் மாவட்ட சமூக நல அலுவலர் சுகிர்தா தேவி, முதன்மை கல்வி அலுவலர் ஜெகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது முத்துவடிவேல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் உடன் இருந்தனர்.
Next Story