பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் போலி பெண் போலீசை கைது செய்த போலீசார்.,
Pollachi King 24x7 |3 Sep 2024 1:21 PM GMT
பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் காவலர் உடை அணிந்து பணிபுரிந்த போலி பெண் போலீசை கைது செய்யப்பட்டார்.,
காவல்துறை உடை அணிந்து ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலி பெண் போலீசை கைது செய்து ஆனைமலை போலீசார் விசாரணை., பொள்ளாச்சி., செப்டம்பர்.,03 பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலத்திலிருந்து அதிகளவில் பக்தர்கள் நாள்தோறும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்., இந்நிலையில் இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது ஆனைமலை இதனால் போலீசார் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்., அப்போது போலீஸ் உடை அணிந்த பெண் ஒருவர் பாதுகாப்பு பணியில் பரபரப்பாக ஈடுபட்டு இருந்தார் வழக்கமாக பணியாற்றும் போலீசாருக்கு அந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார்., இதனை அடுத்து ஆனைமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது கோவிலுக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பணபள்ளியை சேர்ந்த ரீத்தா என்பதும் காவல்துறையின் மீது உள்ள ஈர்ப்பினால் போலீஸ் உடை அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரிவித்தார்., இதனையடுத்து வழக்கு பதிவு செய்த ஆனைமலை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் பணகளை மேற்கொண்டு வருகின்றனர் ., காக்கி சட்டை கமல்ஹாசன் போல் போலீஸ் உடை அணிந்து பெண் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது ஆனைமலை பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.,
Next Story