கள்ளச்சாராய விற்பனை நடவடிக்கை கிராம உதவியாளர்முதல் உள்ளாட்சி பிரதிநிதிகள்வரை பொறுப்பு
Mayiladuthurai King 24x7 |4 Sep 2024 10:45 AM GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் போதைப்பொருள் குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனி whatsapp எண் உருவாக்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஆய்வு கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாப தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரர் தெரிவித்ததாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைபொருள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானம் முற்றிலுமாக ஒழிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுக்கள் கூட்டாக சேர்ந்து பெட்டி கடைகள், டாஸ்மாக் மதுபான கூடம் (பார்), தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்ட இடங்கள் கண்காணிக்கப்பட வேண்டும். தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படும் இடம், எங்கிருந்து வாங்கப்படுகிறது, யாராருக்கு விற்பனை, எந்தெந்த ஊருக்கு விற்படுகிறது என்பதை கண்டறிய வேண்டும். தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உடன் அருகிலுள்ள காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்திட வேண்டும். கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனையினை ஆரம்ப நிலையிலேயே தடுத்து ஒழித்திடும் பொருட்டு, வட்டார அளவில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான விற்பனை தொடர்பான விவரங்களை அறிந்திடவும், மேல் நாடவடிக்கைக்காக மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை அளித்திட வேண்டும். வருவாய் வட்டாட்சியர்கள், தங்கள் வட்டத்திற்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடத்தி கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை நடைபெறும் இடங்களை கண்டறிந்து தெரிவித்திட அறிவுரை வழங்கிட வேண்டும். கிராம அளவில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை முனையங்கள் பற்றிய விவரங்களை, கிராம நிர்வாக அலுவலர்கள் விசாரணை செய்து அறிக்கை பெற்று, அதனடிப்படையில் நகராட்சி ஆணையர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், வருவாய் வட்டாட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திட வேண்டும். பேரூராட்சிகளில், செயல் அலுவலர்கள் தங்கள் எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை முனையங்கள் பற்றிய விவரங்களைச் சேகரித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும. காவல்துறை உதவியுடன் அக்கடையினை சீல் செய்து சட்ட வழிமுறைகளின்படி அக்கடை உரிமையாளார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மதுவிலக்கு அமல் பிரிவு போலி மதுபானம், கள்ளச்சாரயம், வெளிமாநில மதுபானம் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு தொடந்து நடவடிக்கை எடுக்கபட வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நகர, கிராம ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் கள்ளசாராயம், கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-1077, மற்றும் 7092255255 என்ற வாட்ஸ்சப் எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி😂தெரிவித்தார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துவடிவேல் ஆகியோர்; கலந்து கொண்டனர்.
Next Story