உயிரியல் பாடத்திற்கான முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி - மாவட்ட ஆட்சியர் துவக்கினார்
Mayiladuthurai King 24x7 |5 Sep 2024 6:32 PM GMT
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி மேல்நிலைப் பள்ளியில் உயிரியல் பாடத்திற்கான முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்
. மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி மேல்நிலைப் பள்ளியில் உயிரியல் பாடத்திற்கான முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: மாணவர்கள் கல்வியில் உயர்வதற்கு தேவையான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். அவர்கள் கல்வியில் உயர ஊக்கப்படுத்தி கற்க செய்ய வேண்டும். கல்வி கற்பதை சுமையாக கருதாமல் எளிமையாக கற்கும் வகையில் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரையும் சிறந்த மாணவராக உருவாக்குவது ஆசிரியர்களின் கடமை ஆகும். ஆசிரியர்களின் உழைப்பு மாணவர்கள் வாழ்க்கையில் உயர்வதற்கு வழி வகுக்கும். தற்போது, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வினா-விடை கையேடு ஒவ்வொரு பள்ளியிலும் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கு பயனுள்ளதாக அமையும். மாணவர்களை அன்றைய பாடத்தை மறுநாள் வினாவாக கேட்டு, அவர்களை தயார்படுத்த வேண்டும். கடினமான உழைப்பு வாழ்க்கையில் உயர்வதற்கு சிறந்த வழியாக அமையும் என்ற பொருளை மாணவர்களுக்கு எடுத்து கூற வேண்டும். இக்கல்வியாண்டு அனைத்து மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கு அனைத்து ஆசிரியர்களும் தங்களை முழுமையாக கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். ஆசிரியர் பணி தலையாய பணி. அப்பணியை மேற்கொள்ளும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்தார். இந்நிகழ்வில், முதன்மை கல்வி அலுவலர் .ஜெகநாதன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக்கணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story