பொள்ளாச்சி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவில் இஸ்லாமியர்கள் பங்கேற்பு.,
Pollachi King 24x7 |7 Sep 2024 9:30 AM GMT
தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய மாட்டுச்சந்தையாக உள்ள பொள்ளாச்சி மாட்டுச் சந்தைக்கு இஸ்லாமிய பெண்கள் மற்றும் குழந்தைகள் விநாயகர் சிலைகளை கொண்டு வந்து அபிஷேகம் செய்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர்.,
தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய மாட்டுச்சந்தையாக உள்ள பொள்ளாச்சி மாட்டுச் சந்தைக்கு இஸ்லாமிய பெண்கள் மற்றும் குழந்தைகள் விநாயகர் சிலைகளை கொண்டு வந்து அபிஷேகம் செய்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர்., பொள்ளாச்சி.,செப்டம்பர்.,07 பொள்ளாச்சி மாட்டுச்சந்தை தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய மாட்டுச்சந்தையாக உள்ளது வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாட்டுச்சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்வது வழக்கம்., இந்த மாட்டுச்சந்தையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டும் விநாயகர் சதுர்த்தி விழா மாட்டு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மூலம் கொண்டாடப்பட்டது., மேலும் மாட்டுச்சந்தை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் அதிக அளவில் இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர் இந்நிலையில் இன்று மாட்டுச்சந்தையில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இஸ்லாமிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மத பேதம் இன்றி தங்கள் வீடுகளிலிருந்து தட்டு சீர்வரிசியுடன் மேளதாளங்கள் முழங்க விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மாட்டுச் சந்தையில் வைத்து சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் செய்து செய்து மத பேதமின்றி இந்து முஸ்லீம் சகோதரத்துவ நல்லிணக்கணமாக வழிபாடு செய்து சென்றனர்., இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ், தமிழ்மணி, அமுத பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.,
Next Story