சங்கரன்பந்தல் பகுதியிலிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக சென்று நீர்நிலையில் கரைக்கப்பட்டன
Mayiladuthurai King 24x7 |7 Sep 2024 6:15 PM GMT
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் கோயில்கள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகள் கரைக்கப்பட்டன
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு தலங்களிலும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தரங்கம்பாடி தாலுக்கா எரவாஞ்சேரி, சங்கரன்பந்தல், இலுப்பூர், உத்திரங்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 3 அடி முதல் 7 அடிவரை உள்ள பலவண்ண நிறத்தில், பல்வேறு வடிவங்களில் பக்தர்களை கவரும் வகையில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் இன்று கரைக்கப்பட்டது. சங்கரன்பந்தல் கடைவீதியில் இருந்து சுமார் ஏழுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் மேள வாத்தியங்கள் முழங்க இளைஞர்கள் ஆரவாரத்துடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வீரசோழன் ஆற்றில் கரைத்தனர். அதேபோன்று தரங்கம்பாடி தாலுக்காவில் பல்வேறு பகுதிகளில் வைத்து பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தரங்கம்பாடி கடற்கரையில் கடலில் கரைக்கப்பட்டது. விநாயகர் சிலைகள் ஊர்வலம் காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story