மாநில அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க வீரர்கள் தேர்வு

மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள்:- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்
மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் மாவட்ட தடகள அசோசியேஷன் சார்பில் மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட தடகள சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் செயலாளர் செல்வகணபதி ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். முன்னதாக தேசிய கொடியை ஏற்றி வைத்து, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டனர். பின்னர் 14, 16, 18, 20 ஆகிய வயதிற்கு உட்பட்டோர் என நான்கு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த 500-க்கு மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு ஏறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஈரோட்டில் செப்டம்பர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதிபெற்றனர்.
Next Story