திரு இந்தளூர் ஹயக்ரீவர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருவிழந்தூரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்விதரும் கடவுளான ஹயக்ரீவர் மற்றும் ஸ்ரீவேதாந்த தேசிகன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவருடன் வேதாந்த தேசிகனும் பிரதானமாக எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தால் பராமரிக்கப்பட்டு வரும் இக்கோயிலில் இன்று மகா சம்ப்ரோக்ஷணம் எனப்படும் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழா கடந்த வெள்ளிக்கிழமை பகவத் அனுக்ஜை, விக்னேஸ்வர ஆராதனம் ஆகிய பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கி 3 கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக தினமான இன்று காலை மூன்றாம் கால யாகசாலை பூஜை நிறைவில், பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு ராஜகோபுரம் மற்றும் விமான சம்ப்ரோக்ஷணம் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
Next Story





