பொள்ளாச்சி அடுத்துள்ள நா.மூ.சுங்கம் பகுதியில் இரண்டு கோடி செலவில் நடைபெறும் சாலை விரிவாக்க பணிகளுக்காக அப்புறப்படுத்தப்பட்ட சாலையோர மரங்களுக்கு மறுவாழ்வு அளிப்பு.,
Pollachi King 24x7 |13 Sep 2024 10:33 AM GMT
பொள்ளாச்சி அடுத்துள்ள நா.மூ.சுங்கம் பகுதியில் இரண்டு கோடி செலவில் நடைபெறும் சாலை விரிவாக்க பணிகளுக்காக அப்புறப்படுத்தப்பட்ட சாலையோர மரங்களுக்கு மறுவாழ்வு அளிப்பு.,
பொள்ளாச்சி அடுத்துள்ள நா.மூ.சுங்கம் பகுதியில் இரண்டு கோடி செலவில் நடைபெறும் சாலை விரிவாக்க பணிகளுக்காக அப்புறப்படுத்தப்பட்ட சாலையோர மரங்களுக்கு மறுவாழ்வு அளிப்பு., பொள்ளாச்சி., செப்டம்பர்.,13 பொள்ளாச்சி வால்பாறை சாலையில் உள்ள நா.மூ.சுங்கம் முதல் மஞ்ச நாயக்கனூர் ஆத்து பாலம் வரை, ஆனைமலை உடுமலை சாலையில் நெடுஞ்சாலை துறை மூலமாக சாலை விரிவாக்க பணிகள் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது., இந்நிலையில் சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்த 10 மரங்களை வெட்டாமல் மறு நடவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டனர்., இதனை அடுத்து பசுமை குழு மரங்கள் மறு நடவு சிறப்பு நிபுணர் கிரீன் கேர் சையத் மற்றும் இயற்கை ஆர்வலர் மரம் மாசிலாமணி இணைந்து புங்கமரம், வேப்பமரம்,ஆயமரம் போன்ற 10 மரங்களை கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி மறு நடவு செய்தனர்., இதனால் மரங்கள் வெட்டப்படாமல் அப்படியே வேருடன் பிடுங்கி வேறு ஒரு இடத்தில் மறுநடவு செய்யப்பட்டதை அறிந்த அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.,
Next Story