லிஃப்ட் கேட்டு சென்று விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட வர் மனு

மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்து உடல் பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்துடன் நேரில் மனு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா செங்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜீ(44).  கடந்த மாதம் 25 ஆம் தேதி மதியம் அசிக்காடு கிராமத்து வழியாக  இருசக்கர வாகனத்தின் பின்னே அமர்ந்த சுந்தர்ராஜீ சென்றபோது டிராக்டர் டிப்பர் இசக்கி விபத்துக்குள்ளாகினர்.   அதனால் கை மற்றும்  இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டு இரண்டு கால்கள் மற்றும் கைகளில் இரும்பு பிளேட் வைத்து சிகிச்சை பெற்றார். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சுந்தர்ராஜீ வீட்டிற்கு செல்லாமல் தனது குடும்பத்தாருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து விபத்து குறித்து குத்தாலம் காவல் நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் டிராக்டர் உரிமையாளர் கோவங்குடி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார். அப்போது சுந்தர்ராஜின் மனைவி மாவட்ட ஆட்சியர் மகாபாரதியின் காலில் விழுந்து கதறி அழுது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் நான் எழுந்து நடக்கவே இரண்டு ஆண்டுகள் மேலாகும் என்பதால்  கல்லூரியில் படிக்கும் மகள், பள்ளியில் படிக்கும் மகனுக்கு பணம் கட்ட முடியாமல் தவிப்பதாகவும் கையெடுத்து கும்பிட்டு கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் கூறினார்.  இதையடுத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், விபத்தில் படுகாயம் அடைந்த சுந்தர்ராஜுக்கு பெட்டிக்கடை வைத்து நடத்த ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்தார்.
Next Story