இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீர்த்தவர்களுக்கு நினைவஞ்சலி

வன்னியர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு மயிலாடுதுறை கேணி கரையில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் அஞ்சலி
மயிலாடுதுறை கேணிக்கரை பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர்களின் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 21 தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க அய்யாசாமி, வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் பாக்கம் சக்திவேல் பாமக மாவட்ட தலைவர் பழனிசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, பாமக நகர செயலாளர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தி முழக்கமிட்டனர்.
Next Story