மயிலாடுதுறை வேளாண்மை கிடங்கு கண்காணிப்பாளர் தற்கொலை
Mayiladuthurai King 24x7 |18 Sep 2024 9:24 AM GMT
மயிலாடுதுறையில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடங்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் மணிக்குமார் (58). தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த பசுபதிகோயில் பகுதியை சேர்ந்த இவர் தினமும் ரயில் மூலம் சென்று வந்துள்ளார். இவருக்கு பணிச்சுமை மேலும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் பணி செய்ய வேண்டி இருந்ததால் பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஊரிலிருந்து மயிலாடுதுறைக்கு வந்து இரவு வேளாண் விரிவாக்க மைம அலுவலகத்திலேயே தங்கி இருந்த இவர் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை பணிக்கு வந்த அலுவலர்கள் பார்த்துவிட்டு மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் உடலை கைப்பற்றி, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரது சட்டைப் பையில் மனைவி மகன் அண்ணன் ஆகியோரது செல்போன்எண்களை குறித்து வைத்திருந்தார்.
Next Story