டிஜிட்டல் சர்வே முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து விஏஓக்கள் ஆர்ப்பாட்டம்
Mayiladuthurai King 24x7 |20 Sep 2024 4:14 AM GMT
டிஜிட்டல் க்ராப் சர்வே முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
:- தமிழ்நாட்டில் டிஜிட்டல் க்ராப் சர்வே முறை பிப்ரவரி மாதம் நடைமுறைக்கு வந்தது. இந்த முறையில் நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும், டிஜிட்டல் முறையில்; கரும்பு, வாழை, சவுக்கு உள்ளிட்ட தோட்டங்களில் சர்வே செய்ய இயலாத இடங்களை கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும், இந்த பணிக்கு தேவையான கூடுதல் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும், தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்றித் தரப்படாததையடுத்து, டிஜிட்டல் க்ராப் சர்வே முறையை ஆக.19-ஆம் தேதியுடன் கிராம நிர்வாக அலுவலர்கள் நிறுத்தினர். இந்நிலையில், இம்முறையில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய வலியுறுத்தி மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டங்களில் உள்ள கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு தலைவர் திருமலைசங்கு தலைமையில் ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் இம்மாதம் 30-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
Next Story