மயிலாடுதுறை ஞானாம்பிகை கல்லூரியில் மிகப்பெரிய தனியார் வேலைவாய்ப்பு முகாம்
Mayiladuthurai King 24x7 |21 Sep 2024 11:54 AM GMT
அரசு பள்ளியில் படித்து , அரசின் மதிய உணவை சாப்பிட்டு தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன்:- மயிலாடுதுறையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் துவக்க விழாவில் எம்பி சுதா
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கல்லூரியில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மையம் , தமிழ்நாடு மாநில ஊரக , நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை எம்.பி. சுதா, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார் , நிவேதா முருகன் , பன்னீர்செல்வம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இதில், திருச்சி , சென்னை , கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்றன. 1400க்கு மேற்பட்ட வேலைநாடுனர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா பேசுகையில் கல்விக்கண் திறந்த காமராஜர் கொடுத்த கல்வியால் தான் இன்று நான் அரசுப் பள்ளியில் படித்து , அரசு வழங்கிய மதிய உணவை சாப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினராகி இருப்பதாக தெரிவித்தார். கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு தேர்தல் அறிக்கையில் பாஜக வருடத்திற்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு இளைஞர்களுக்கு உருவாக்கி தருவேன் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்து இருந்தார். தற்போது பத்து வருடங்களை கடந்த நிலையில் 20 கோடி வேலைவாய்ப்பை புதிதாக ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்றும் , ஆனால் 12 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பு இழந்து இருப்பதாகவும் கூறினார். இதுவே மத்திய அரசின் சாதனை என அவர் குற்றம் சாட்டி பேசினார்.
Next Story