இன்ஜினியரிங் பட்டதாரி ஆன்லைன் கடனால் வழிப்பறி திருடனாகிய கதை
Mayiladuthurai King 24x7 |22 Sep 2024 5:37 AM GMT
மயிலாடுதுறையில் மூதாட்டியின் 5 பவுன் தங்கசெயினை பறித்து சென்ற காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை 2 நாளில் தீவிர தேடுதல் வேட்டையில் தனிப்படை போலீசார் பிடித்தனர்
:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பட்டமங்கலம் பேச்சாவடி மேகனாப்பள்ளி சாலையை சேர்ந்த அன்பழகன் மனைவி மலர்க்கொடி(67). இவர் கடந்த 19ஆம் தேதி காலை வீட்டின் அருகே சாலையில் நடை பயிற்சி செய்தபோது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் மலர்கொடி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பியோடினார். இச்சம்பவம் அறிந்த வந்த மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. எஸ்.ஐ இளையராஜா தலைமையில் தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை திருமஞ்சன வீதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் விஜயபாலன்(26) வழிபறி சம்பவத்தில் ஈடுபட்டதை உறுதி செய்தனர். விஜயபாலனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 9 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். விஜயபாலன் கடந்த மார்ச் மாதம் செம்பனார்கோவில் காவல் எல்லைக்குட்பட்ட கீழையூர் பகுதியில் 4 பவுன் தாலிசெயினை பறித்து சென்றதும் தெரியவந்தது. இன்ஜினியரிங் சிவில் பட்டதாரியான விஜயபாலன் ஆன்லைனில் 6 லட்சத்திற்குமேல் கடன் வாங்கி செலவு செய்து வந்த நிலையில் தனது புல்லட்டை அடகு வைத்தும் அதிலிருந்து மீள முடியவில்லை. ஆன்லைன் கடனை அடைப்பதற்காக திருட்டுத் தொழில் ஈடுபட முடிவு செய்து பிரத்தியேகமாக நம்பர் பிளேட் இல்லாத பைக்கை வாங்கி பயன்படுத்தி வழிபறியில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்குமுன் காதலித்து ஒருபெண்ணை திருமணம் செய்த விஜயபாலன். தனது தொழிலை மீண்டும் தொடர்ந்தார். கடந்த 19ஆம் தேதி வழிப்பறியில் தனிப்படை போலீசார் 2 நாட்களில் நெருங்கினர். கைதுசெய்யப்பட்ட விஜயபாலனை மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி முன்னிலையில் தனிப்படை போலீசார் ஓப்படைத்தனர். இரண்டு நாட்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு டிஎஸ்பி திருப்பதி பாராட்டு தெரிவித்தார். ஒன்பது பவுன் நகையை பறிமுதல் செய்து விஜயபாலனை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆட்சி செய்து மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story