மயிலாடுதுறை அருகே புதிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் திறப்பு
Mayiladuthurai King 24x7 |23 Sep 2024 10:59 AM GMT
மயிலாடுதுறை அருகே புதியதாக கட்டி முடிக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக எம்எல்ஏ ராஜகுமார் திறந்து வைத்தார்
மயிலாடுதுறை அருகே மணக்குடி ஊராட்சியில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூபாய் 62.50 லட்சம் மதிப்பீட்டில் நிரந்தரமாக செயல்படக்கூடிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டப்பட்டது. தொடர்ந்து இதன் திறப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில் முதலமைச்சர் மு.க..ஸ்டாலின் காணொலி மூலமாக சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மணக்குடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்துகொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ரிப்பன் வெட்டி பணிகளை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கொள்முதல் நிலையத்தில் நடைபெற்று வரும் நெல் கொள்முதல் பணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்வில், நுகர்வோர் வாலிபர் கழக முதுநிலை மண்டல மேலாளர் சதீஷ்குமார் ,ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story