மாவட்ட ஆட்சியர் உத்தரவை மதிக்க மறுக்கும் அதிகாரிகள்
Mayiladuthurai King 24x7 |24 Sep 2024 9:33 PM GMT
மயிலாடுதுறை அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக கையகப்படுத்தப்பட்டதுக்கு பதிலாக மாற்று இடம் மற்றும் இழப்பீட்டுத் தொகை வழங்க கோரி மனு மாவட்ட ஆட்சியர் உத்தரவை மதிக்க மறுக்கும் அதிகாரிகள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காடு கிராமம் மெயின் ரோட்டில் வசிக்கும் 9 குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் இடங்கள் நாகப்பட்டினம் மாவட்ட தனி வருவாய் அலுவலரின் உத்தரவின் பேரில் கையகப்படுத்தப்பட்டன. மேலும் இந்த இடங்களில் இருந்த வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அந்த இடங்களில் இருந்த 40-க்கு மேற்பட்ட உயிர் மரங்களும் விரிவாக்க பணிக்காக அழிக்கப்பட்டன. கையகப்படுத்தப்பட்ட இடத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என தனி மாவட்ட வருவாய் அலுவலர் உறுதி அளித்திருந்த நிலையில், இழப்பீடுத் தொகை இதுநாள் வரை அந்த குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை. இதனால் தங்குவதற்கு இடமில்லாமல் அந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் கடந்த ஒரு மாதமாக தங்கள் உறவினர்களின் வீடுகளிலும், மரத்தடியிலும் தங்கி காலத்தை கடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே புகார் அளித்த போது இடம் வழங்கச் சொல்லி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் இதுவரை அதிகாரிகள்நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மீண்டும் மனு அளித்தனர். கையகப்படுத்தப்பட்ட இடத்துக்கு பதிலாக மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் அதற்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்
Next Story