மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Mayiladuthurai King 24x7 |24 Sep 2024 9:50 PM GMT
தமிழ்நாடுமேல்நிலைப்பபள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம்
. தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தினர் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்டத் தலைவர் பரமசிவம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாட்ட செயலாளர் தாமரைச் செல்வன் வரவேற்புரை ஆற்றினார். கடந்த ஓராண்டு காலமாக சிறுசிறு பிரச்சனைகளைக் காரணம் காட்டி தொடர்ச்சியாக மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பணியிடை நீக்கம், இடமாறுதல் செய்வதை வன்மையாக கண்டிப்பதாகவும் கல்விக்கு சம்பந்தமில்லாத துறை வேலைகளை விடுவது தலைமை ஆசிரியர்களது பணிகளை பாதிப்பதாகவும், கல்வி தொடர்பில்லாத பணிகளை அளிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் முழக்கமிட்டனர். தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்து கருப்பு பட்டை அணிந்து பணி செய்து வந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமமூர்த்தி, கல்வி மாவட்டத் தலைவர், அறிவுடைநம்பி, மாநில துணைத் தலைவர், த சாந்தி, மாவட்ட மகளிரணிச் செயலாளர், ரமா, கல்வி மாவட்ட மகளிரணிச் செயலாளர், அன்புச்செழியன், மாவட்ட செய்தித்தொடர்பாளர், ஸ்ரீதர், மாவட்ட அமைப்புச் செயலாளர் ஆகியோர்முன்னிலை வைத்தனர். அருள்மொழி, கல்வி மாவட்ட செயலாளர் சரஸ்வதி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் உட்பட பலர்வாழ்த்துறை வழங்கினர்.
Next Story