மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி பாசிச பாஜக கூட்டணிக்கு கடிவாளம் போட்டுள்ளது:-

மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் கலைஞர் உருவ சிலையை திறந்து வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு:-
. மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு கருணாநிதியின் முழு உருவ வெண்கல கிளையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் ஆன கலைஞர் மு கருணாநிதியின் உருவ சிலை மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன்முறையாக மணல்மேடு கிராமத்தில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் நிறுவப்பட்டுள்ளது. மணல்மேடு கடைவீதியில் உள்ள கலைஞர் படிப்பகம் வளாகத்தில் கலைஞரின் எட்டே கால் அடி உயரம் கொண்ட முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது திறந்து வைத்தார். முன்னதாக அவர் திமுக கொடிக்கம்பத்தை திறந்து வைத்து கொடி ஏற்றினார். அவருக்கு மாவட்ட திமுக சார்பில் புத்தர் சிலை மற்றும் செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர். தொடர்ந்து மேடையில் பேசிய  அமைச்சர் உதயநிதி கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞரின் முதல் உருவ சிலையை திறந்து வைப்பது மகிழ்ச்சி அடைகிறேன். சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே பெற்ற தலைவர் கலைஞர், இந்திய அரசியலில் முக்கிய பங்கு வகித்தவர் என்றும் கடந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி பாசிச பாஜக கூட்டணிக்கு கடிவாளம் போட்டுள்ளது  வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தலைவர் அறிவித்தது போல் 200 தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும், விடுபட்ட மகளிர் உரிமைத்தொகை நிச்சயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேசினார்.
Next Story