துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு ஏற்பு மயிலாடுதுறையில் திமுகவினர் கொண்டாட்டம்

துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பு மயிலாடுதுறையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம்‌
. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் குண்டாமணி செல்வராஜ் தலைமையில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கட்சி அலுவலகத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்று பட்டாசு வெடித்தும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்க என கோஷங்களை எழுப்பியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
Next Story