குத்தாலம் பேரூராட்சி காவிரி ஆற்றங்கரையில் மாவட்ட ஆட்சியர் பனை விதை நடவு
Mayiladuthurai King 24x7 |29 Sep 2024 4:52 PM GMT
ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரிக்கரைகள் மற்றும் நீர்நிலைகளின் கரையோரங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியினை மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட காவிரி ஆற்றங்கரையில் பனைவிதைகளை நட்டுவைத்து தொடங்கி வைத்தார்
:- தமிழ்நாட்;டின் மாநில மரமான, தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய பராமரிப்பில்லாமல் காலத்துக்கும் பயன்தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் விதமாகவும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து தமிழ்நாடு முழுக்க பனை விதைகள் சேகரிக்கப்பட்டு 5 கட்டங்களாக பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தருமபுரி, சேலம், ஈரோடு. நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரிக்கரையின் இருப்பக்கங்களிலும் 416 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடு;துறை மாவட்டத்தில் பனை விதைகள் நடவு செய்யும் பணியினை குத்தாலம் பேரூராட்சி காவிரி ஆற்றங்கரை பகுதியில் பனைவிதைகளை நட்டுவைத்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 லட்சம் பனைவிதைகளை நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து வட்டாரத்திற்குட்பட்ட 19 இடங்களில் பனைவிதைகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள் கலந்து கொண்டு பனைவிதைகளை நட்டனர். இதில்; மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.விஷ்ணுபிரியா, குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன், மாவட்ட சுற்றுசூழல் பொறியாளார் தமிழ்ஒளி, வட்டாட்சியர் சத்யபாமா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஷோபனா உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story