சீர்காழி சிங்காரத்தோப்பு மனை பிரிவு விற்பனையில் மோசடி நடவடிக்கை கோரி மன
Mayiladuthurai King 24x7 |1 Oct 2024 5:45 PM GMT
சீர்காழி சட்டநாதர் ஆலய தோப்பு இடத்தில் மனை பிரிவு போட்டு விற்பனையில் முறைகேடு நடத்திய ரியல் எஸ்டேட் நபர் மீது நடவடிக்கை கோரி எஸ்.பியிடம் மனு
கோயில் இடத்தில் போடப்பட்ட மனைப்பிரிவு இடத்தை காலிசெய்யக்கூறி ரியல்எஸ்டேட் அதிபர் மிரட்டுவதாக எஸ்.பி.யிடம் புகார் மனு! மனையை போலி பத்திரம் மூலம் விற்றவர்கள் மீது சீர்காழி போலீசில் புகாரின் எதிரொலி ? மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த பாஸ்கரன், சரவணன் ஆகியோர் எஸ்.பி.அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர், அதில் சீர்காழியில் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான சிங்காரத் தோப்பில் 5 ஏக்கர் திடல் நிலத்தில் பள்ளிக்கூடமும் மனை பிரிவு அமைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மனை பிரிவை விற்பனை செய்து வரும் திருவெண்காடு செல்வம் என்பவர் தங்களை ஏமாற்றி விட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு மனை பிரிவை பெற்றுத்தர வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். இதே பாஸ்கரனும் சரவணனும் சிங்காரத் தோப்பில் 83வது மனையை போலி ஆவணம் மூலம் ஒருவரிடம் விற்பனை செய்ததை மீட்டுக் கொடுக்க ஆகஸ்ட் மாதம் சீர்காழி காவல் நிலையத்தில் செல்வம் புகார் அளித்திருந்தார். போலீசார் எடுத்த நடவடிக்கையில் பிளாட்டை வைத்திருந்த நபர் அதன் சாவியை காவல் துறையினரிடம் ஒப்படைத்து விட்டாராம் இதன் எதிரொலியாக மயிலாடுதுறை எஸ் பி யிடம் ஆதீனம் இடத்தை மனை பிரிவாக மாற்றி விற்பனை செய்து வரும் செல்வம் மீது எதிர் புகார் தெரிவித்திருப்பதாக செல்வம் தரப்பில் கூறப்படுகிறது. 27 ஆவது தருமபுரம் ஆதீனம் பொறுப்புக்கு வந்ததிலிருந்து தொடர் சர்ச்சைகள் ஏற்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது
Next Story