கௌரவ விரிவுரையாளர்கள் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் சந்திப்பு
Mayiladuthurai King 24x7 |4 Oct 2024 8:28 AM GMT
மயிலாடுதுறை நகருக்கு வருகை தந்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவிட் செழியன் அவர்கள் சந்தித்து கௌரவ விரிவுரையாளர்கள் தங்களது பணி நிரந்தர கோரிக்கையை முன் வைத்தனர்.
மயிலாடுதுறைக்கு வருகை தந்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியனிடம் கௌரவ விரிவுரையாளர்கள் சந்தித்து மனு அளித்தனர், அதில் தெரிவித்திருப்பதாவது தமிழக அமைச்சரவையில் நம் டெல்டா மாவட்டங்களின் சார்பாக தங்களை அமைச்சராக தேர்வு செய்ததற்கு நமது தமிழக அரசுக்கு நன்றியையும் தங்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். பல ஆண்டுகளாக யுஜிசி கல்வி தகுதியுடன் பணி அனுபவத்தைப் பெற்று குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறோம். 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நமது திமுக அரசு அளித்த வாக்குறுதி எண் 153-ல் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியையும் தமிழக முதல்வர் ஐயா அவர்கள் நிறைவேற்ற அரசாணை எண். 56 இன் படி சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு யுஜிசி கல்வி தகுதியுடன் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் கௌரவ விரிவுரையாளர்களை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் கொடுத்த 2010 ஆண்டு தகுதியுடைய கௌரவ விரிவுரையாளர்கள் ஓராண்டிற்குள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதிப்படியும் பணிநிரந்தரம் செய்து, இறந்து போன கௌரவ விரிவுரையாளர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு நிதி வழங்கியும் மற்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணிப்பாதுகாப்புடன் கூடிய யுஜிசி பரிந்துரைத்த ஊதிய உயர்வு (50,000) வழங்கியும் கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டுமாய் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் .இத்துடன் கௌரவ விரிவுரையாளர்களின் இருபது அம்ச கோரிக்கைகளும் தங்கள் பார்வைக்கு பணிந்து சமர்ப்பிக்கிறோம் என அதில் தெரிவித்திருந்தனர்.
Next Story