போலி பர்மிட் மூலம் காரைக்காலுக்கு மணல் கடத்தல் எஸ்பி நேரடி நடவடிக்கை
Mayiladuthurai King 24x7 |6 Oct 2024 6:37 AM GMT
பொறையார் நண்டலாறு காவல் சோதனை சாவடியில் எஸ்பி நேரடி ஆய்வு. போலி ஆவணம் மூலம் சவுடுமணல் ஏற்றி காரைக்காலுக்குச் சென்ற லாரி பறிமுதல் எஸ் பி நேரடி நடவடிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள நண்டலாறு சோதனை சாவடியானது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் மாநில எல்லைப் பகுதியாக உள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக நான்கு வழிச்சாலைக்கு சவுடுமண் எடுத்துச் செல்வதாக கூறி தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் கொண்டு சென்றன, அவையில் அனைத்தும் போலி அனுமதி என ரகசிய தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வந்ததால். நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நண்டலாறு காவல் சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது சவுடு மண் ஏற்றி வந்த லாரியை மடக்கி சோதனை செய்த போது மணல் எடுத்துச் செல்வதற்காக போலி ஆவணம் தயார் செய்து எடுத்து சென்றது தெரியவந்தது. மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் உடனடியாக லாரியை பறிமுதல் செய்த பொறையார் காவல் ஆய்வாளர் ஜெயந்தி லாரி ஓட்டுநர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முருகானந்தம்(47) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் நான்கு வழிச்சாலை பணிக்காக டெண்டர் விடப்பட்டு சவுடுமண் எடுக்கும் மேலபெரும்பள்ளம் மணல் குவாரியில் இருந்து அனுமதிச்சீட்டை போலீயாக தயாரித்து நாகப்பட்டிணத்திற்கு மணலை எடுத்து செல்லும்போது பிடிபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து பல மாதங்களாக இது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. எஸ் பி யின் நேரடி நடவடிக்கையால் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர்கள், காவல் நிலையங்கள், கோட்டாட்சியர், சுரங்க துறையினர் என பல்வேறு தரப்பு அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
Next Story