நாற்றுப்பறித்து பருத்தி நடவு பணியில் வட மாநில தொழிலாளர்கள் உற்சாகம்
Mayiladuthurai King 24x7 |7 Oct 2024 3:41 AM GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாய கூலி தொழிலாளர்கள் 100நாள் வேலைக்கு செல்வதால் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக சம்பா நடவு பணிக்கு வந்த வடமாநில தொழிலாளர்கள். வடமாநில பாடல்களை பாடி உற்சாகத்துடனும் மிக நேர்த்தியாக திருந்திய நெல் சாகுபடி முறையில் நாற்றுபரித்து கைநடவு. குறைந்த சம்பளத்தில் வடமாநில தொழிலாளர்கள்
:- தமிழகத்தில் காவிரி கடைமடை பகுதியாக இருக்கக்கூடிய மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. பம்புசெட் நீர் மற்றும் காவிரிநீரை கொண்டு அதிக அளவில் இப்பகுதியில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாய பணிகளுக்கு தேவையான ஆட்கள் கிடைக்காததால் பல ஆண்டுகளாக விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நடவு செய்தல், அறுவடை பணிகளை இயந்திரம் மூலம் விவசாயிகள் மேற்கொண்டு வந்தாலும் சம்பா, தாளடி பருவத்தில் அடிக்கடி மழை பெய்யும் என்பதாலும் இயந்திர நடவு செய்தால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கரைந்து சேதமடைவதை தவிர்ப்பதற்கான பல விவசாயிகள் பழைய முறைப்படி கூலி ஆட்களை வைத்து நாற்றுப்பறித்து பெண் தொழிலாளர்கள் மூலம் நடவு செய்து வருகின்றனர். பெண் கூலி தொழிலாளர்கள் 100 நாள் வேலைக்கு சென்றுவிடுவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி, குறுவை சாகுபடி பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாய பணிகளின் போது நூறுநாள் வேலையை நிறுத்தி வைக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தும் பயனில்லை. ஆட்கள் பற்றாக்குறையால் வடமாநில தொழிலாளர்களின் உதவியை விவசாயிகள் நாடியுள்ளனர். மயிலாடுதுறை அருகே ஆனந்தக்குடி. மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் கொல்கத்தாவில் இருந்து வரவழைக்கப்பட்ட வடமாநில ஆண் தொழிலாளர்கள் சம்பா நடவு நாற்றுப்பறித்து அவர்களே நடவு செய்யும் பணியில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர். ஒப்பந்த முறையில் ஏக்கருக்கு 5000 ரூபாய் சம்பளத்தில் 11 தொழிலாளர்கள் நாற்றுபரித்து நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 1 நாளைக்கு 3 முதல் 4 ஏக்கர் வரை நடவு பணிகளை வட மாநில தொழிலாளர்கள்திருந்திய நெல் சாகுபடி முறையில் நாற்றுபரித்து கைநடவு செய்து வருகின்றனர்.
Next Story