மயிலாடுதுறை பாதாள சாக்கடை கழிவு நீர் கிராமத்துக் குளங்களில் நிரம்பியது

மயிலாடுதுறை அருகே ஆக்கூர் இரட்டைக் குளத்தில் மயிலாடுதுறை பாதாள சாக்கடை கழிவு நீர் கலந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் துர்நாற்றம்  பொதுமக்கள் அவதி.   வீடியொ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் கிராம மக்கள் மனு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆக்கூர் கிராமம், பெருமாள் கோவில் தெரு அருகே இரண்டு குளங்கள் அமைந்துள்ளது.  இரட்டைக் குளம் என்று அழைக்கப்படும் இக்குளங்களில் சுத்திகரிக்க படாத மயிலாடுதுறை பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  ஆறுபாதி சத்தியவான் வாய்க்காலில் திறந்துவிடப்பட்ட மயிலாடுதுறை நகராட்சி பாதாள சாக்கடை கழிவுநீர் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள  இரட்டைக் குளங்களில் கலந்து பொதுமக்கள் பயன்படுத்த இயலாத நிலையில் பயனற்று கிடைக்கிறது. கழிவு நீர் கலந்ததால் கடுமையான துர்நாற்றம் வீசி பொதுமக்கள் குழந்தைகள் தொற்று நோய்க்கு ஆளாகி வருவதாகவும் குற்றம் சாட்டி ஆக்கூர், பெருமாள் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த கிராமவாசிகள் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் மகாபாரதியிடம் மனு அளித்து கழிவுநீர் கலந்து நிறம் மாறி சுகாதார சீர்கேடாக உள்ள குளத்தின் வீடியோ ஆதாரத்துடன் புகார் மனு அளித்து குளத்தை சுத்தம் செய்து தண்ணீர் முழுவதையும் மாற்றித் தருமாறு கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்.  பெரியவர் முதல் சிறியவர் வரை பலர் நோய் வாய்ப்பட்டுள்ளதாகவும், குளத்தின் ஒரு பகுதியில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மது அருந்தும் கூடாரமாக மாறி உள்ளதால்  மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் போற்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story