சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி அதிமுகவினர் மனித சங்கிலி

உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப பெற கோரி மயிலாடுதுறையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்
:- சொத்துவரி உயர்த்தப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அந்த அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டங்களை நடந்தி வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நகராட்சி பேரூராட்சிகளில் அதிமுகவினர் சொத்து வரியை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மயிலாடுதுறை நகராட்சியில் கிட்டப்பா அங்காடி அருகே சொத்து வரி உயர்த்தப்பட்டதை திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக வினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் கிட்டப்பா அங்காடியில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் 6 சதவீதம் சொத்து வரியை உயர்த்தப்பட்டதை கண்டித்து மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் பல்வேறு நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர், அத்தியாவசிய பொருட்கள், பத்திரப்பதிவு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும், அதிகரித்து வரும் போதை பொருட்கள், கஞ்சா கள்ளச்சாராயம் பயன்பாட்டை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story