மயூரநாதர் ஆலயத்தில் குழுக்காட்சியில் ஸ்ரீ அபயாம்பிகை
Mayiladuthurai King 24x7 |8 Oct 2024 12:06 PM GMT
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு கொலுகாட்சியில் ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் கெஜம்மூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தில் சிவனை பார்வதி தேவி மயில் உருவில் பூஜித்து சாப விமோசனம் அடைந்ததாக புராணம் கூறுகிறது. பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரியின் 5 ஆம் திருநாளாக இன்று கொலு காட்சியில் ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் கெஜம் மூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஸ்ரீ அபயாம்பிகை அம்மனுக்கு சோடச தீபாராதனை மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கொழுக்காட்சியை கண்டு ரசித்து ஸ்ரீ அபயாம்பிகை அம்மனை தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.
Next Story