மயிலாடுதுறை மொத்த கூட்டுறவு விற்பனை பண்டக சாலையில் வெடிவு விற்பனை ஆட்சியர் துவக்கம்
மயிலாடுதுறை நகராட்சி பகுதிக்குட்பட்ட நாராயணன்பிள்ளை தெருவில் இயங்கும் மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலை தலைமை அலுவலகத்தில் தீபாவளி பட்டாசு விற்பனை கடையை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி , கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாளவிநாயகன் அமுல்ராஜ், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா கூட்டுறவு சங்கங்களின் மண்டல துணை பதிவாளர்கள் ராஜேந்திரன் அண்ணாமலை மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலையின் துணைப் பதிவாளர் பன்னீர்செல்வம் , மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி உள்ளனர்.
Next Story



