அமரன் பட விவகாரம் இந்து எழுச்சி பேரவையினர் போராட்டம்

மயிலாடுதுறையில் அமரன் திரைப்படத்திற்கு ஆதரவாக திரண்ட இந்து எழுச்சி பேரவை , திரையரங்கத்தின் முன்பு தேசிய கொடியுடன் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு
மயிலாடுதுறையில் அமரன் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் விஜயா திரையரங்கத்தின் முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் இன்று மாலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து திரையரங்கத்தின் வாயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே முற்றுகைப் போராட்டம் குறித்த தகவல் அறிந்த இந்து எழுச்சி பேரவையினர் மற்றும் பாஜகவினர் திரையரங்கத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அமரன் திரைப்படத்திற்கு ஆதரவாக தேசியக்கொடியை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சிக்கு எதிராக பேரவையின் நிறுவனத் தலைவர் சந்தோஷ் குமார் தலைமையில் ஏராளமானோர் கோஷங்களை எழுப்பினர். பின்னர் அங்கு வந்த டிஎஸ்பி திருப்பதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்ற நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதியம் காட்சி திரையிடப்பட்டது.
Next Story