இந்திய அரசியலமைப்பு தினம் - பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உறுதிமொழி ஏற்பு.,
Pollachi King 24x7 |26 Nov 2024 6:27 AM GMT
இந்திய அரசியலமைப்பு தினம் - பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உறுதிமொழி ஏற்பு.,
இந்திய அரசியலமைப்பு தினம் - பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் உறுதிமொழி ஏற்பு., பொள்ளாச்சி.,நவம்பர்.,26 ஆண்டுதோறும் நவம்பர் 26 ஆம் தேதி இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது., இந்த ஆண்டு 75 ஆம் ஆண்டு துவக்க விழாவாக கொண்டாடப்படுகிறது இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி காந்தி சிலை முன்பு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்ட அமைப்பு தினத்தையொட்டி உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது., தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் நடைபெற்ற இந்த உறுதிமொழி ஏற்ப்பில் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் ரவி, பொள்ளாச்சி தெற்கு வட்டார தலைவர் வழக்கறிஞர் செல்வகுமார், மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் வித்யாசாகர், நகரத் தலைவர் செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு காந்தி சிலை முன்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் பத்ரகிரி, மோகன்ராஜ், ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.,
Next Story