கோயில் திருக்குளத்தில் விழுந்து இளம்பெண் உயிரிழப்பு சடலத்தை தேடும் பணி
Mayiladuthurai King 24x7 |11 Dec 2024 10:52 PM GMT
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் உள்ள குளத்தில் இளம் பெண் ஒருவர் குதித்ததை பார்த்ததாக சிறுவன் கூறியதன் பேரில் மயிலாடுதுறை தீயணைப்பு துறை மீட்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை
:- மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் முகப்பு ராஜகோபுரம் உள்ளே சென்றவுடன் அமைந்துள்ள பிரம்ம தீர்த்த திருக்குளத்தில் இன்று மாலை 6:30 மணி அளவில் சிகப்பு கலர் சுடிதார் அணிந்த இளம் பெண் ஒருவர் குளத்தில் குதித்து மூழ்கியதாக அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பார்த்துவிட்டு கூச்சலிட்டதை தொடர்ந்து கோயில் நிர்வாகத்தினர் மயிலாடுதுறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத் துறையில் சென்று குளத்தில் பெண் குதித்த போது பார்த்த மகேஷ்ராஜன் என்ற சிறுவனை விசாரித்தனர். அவன் கூறுகையில், அந்தப் பெண் ஒவ்வொரு படியாக கீழே இறங்கும் பொழுது அவன் கத்தியதாகவும் ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் திடீரென்று அப்பெண் குளத்தில் குதித்து மூழ்கினார், அதன் பிறகு தான் கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்ததாக கூறினான் அதன் பேரில் அந்த சிறுவன் காட்டிய குளத்து பகுதியில் தீயணைப்பு துறையினர் 8 பேர் அடங்கிய குழுவினர் குளத்தில் குதித்து மாயமான பெண்ணை ஒன்னரை மணி நேரத்திற்கு மேலாக தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடுதல் பணியை நிறுத்திய தீயணைப்புத் துறையினர் நாளை காலை மீண்டும் தேடும் பணியில் ஈடுபடப்போவதாக தெரிவித்து புறப்பட்டு சென்றனர். இச்சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீசார் பெண் குளத்தில் குதித்து ஏன் தற்கொலை செய்துகொண்டார். காதல் தோல்வியா அல்லது குடும்பத் தகராறா என்பது போன்ற விடைக்கு அந்தப் பெண்ணின் உடல் கிடைத்து பரிசோதனைக்கு பிறகுதான் ஒரு முடிவு தெரியவரும்.
Next Story