போக்சோ வழக்கு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் மயிலாடுதுறையில் முதல் தீர்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முதல்முறையாக ஒரே நாளில் இரண்டு போக்ஸோ வழக்குகளுக்கு பரபரப்பு தீர்ப்பு மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சித்தன்காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி என்பவரது மகன் கல்யாணசுந்தரம் என்கிற வைரவேல்(35). திருவெண்காடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு படித்துவந்த 15 வயது மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் தன்னை அடையாளம் காட்டிவிடக் கூடாது என்பதற்காக அவரை காலால் கழுத்தில் மிதித்து கொலையும் செய்துள்ளார். இதுகுறித்து, திருவெண்காடு போலீஸார் போக்சோ மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து கல்யாணசுந்தரத்தை கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது இவ்வழக்கில் சிறுமியை கொலை செய்த கல்யாணசுந்தரத்துக்கு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் ஒரு ஆயுள் தண்டனையும், கொலை குற்றத்துக்காக ஒரு ஆயுள் தண்டனையும் என இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.4,000; அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சோனி என்கிற சுரேஷ்மேனன்(27). இவர் 2020-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி 4-ஆம் வகுப்பு படித்துவந்த 9 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த போக்சோ வழக்கும் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இவ்ழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனையும் 2ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார். இருவரையும் கொண்டு சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர் அரசு தரப்பில் வழக்குரைஞர் டாக்டர் இராம.சேயோன் ஆஜர் ஆனார். ஒருங்கிணைந்த நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்துக்கு போக்சோ நீதிமன்றம் மாற்றப்பட்ட பின்னர் போக்சோ வழக்கில் ஒரே நாளில் பெறப்பட்ட முதல் 2 தீர்ப்புகள் இவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story