மின்கம்பி அறுந்து விழுந்ததில் இருவர் படுகாயம்

மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரியில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் இருவர் மின்சாரம் தாக்கி குத்தாலம் அரசு மருத்துவமனையில் அனுமதி
. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி கன்னியம்மன் கோவில் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு மின் கம்பங்கள் பழுது அடைந்து முறிந்து விழும் அபாயத்தில் உள்ளது. மின் கம்பிகள் ஆபத்தான நிலையில் தாழ்வான நிலையில் உள்ளது. தெருக்களில் உள்ள மரக்கிளைகளில் மேல் பட்டு மின்கம்பி செல்கிறது. இதனால் அந்த தெருவை சேர்ந்த ஜெகநாதன் மனைவி வெண்ணிலா காய்ந்த துணிகளை எடுக்கச் சென்றபோது மின்சார கம்பி இரண்டு இடங்களில் அறுந்து விழுந்ததில் எதிர்பாராத விதமாக அவர்மீது மின்சாரம் பாய்ந்தது. இதை அறிந்த அருகில் இருந்த ராஜேந்திரனின் மகள் ராஜாத்தி 23 அவரைக் காப்பாற்ற சென்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக இருவரையும் குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story