நடன பள்ளி மாணவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் கிளாசிக்கல் நடனம் பயிலும் மாணவர்களுடன் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடிய நடனப்பள்ளி
மயிலாடுதுறையில் உள்ள "கலை அருவி" தனியார் நடன பயிற்சி மையத்தில் 50-க்கு மேற்பட்ட மாணவர்கள் கிளாசிக்கல் நடனம் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த நடன பள்ளியில் உற்சாக கொண்டாட்டம் நடைபெற்றது. நடன பள்ளியின் நிறுவனர் பரத் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் பலர் கலந்து கொண்டு, கேக் வெட்டியும், கிறிஸ்துமஸ் பாடலை பாடியும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் இணைந்து மாணவர்கள் கிறிஸ்து பிறப்பை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதில் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்த இளைஞர்கள் சிறுவர்களிடம் குதூகலத்தை ஏற்படுத்தினர்.
Next Story