குவைத் நாட்டில் சிக்கித் தவிக்கும் மனநலம் பாதித்த கணவரை மீட்க கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா இலுப்பூரைச் சேர்ந்த நர்கீஸ் பானு என்பவரின் கணவர் அப்துல் ஜப்பார் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குவைத் நாட்டில் உள்ள அரேபியர் ஒருவரின் வீட்டிற்கு ஓட்டுனராக வேலைக்கு சென்றுள்ளார். அங்கு கொடுமைபடுத்தியதால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு அப்துல் ஜப்பாரை காணவில்லை என்று குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி நர்கீஸ் பானு குவைத்தில் உள்ள அப்துல் ஜப்பாரை மீட்டு தரக் கோரி கோரிக்கை மனு அளித்தார். இந்நிலையில் குவைத் நாட்டில் தனது கணவர் அப்துல் ஜப்பார் மனநல மருத்துவமனையில் இருப்பதாகவும் அவர் மீது அங்குள்ள காவல் துறையில் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், தனது கணவரை மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் நர்கீஸ் பானு சார்பில் ஆயப்பாடியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் முஜிப்பூர் ரகுமான் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story



