தந்தை பெரியார் நினைவு நாள் திமுகவினர் அனுசரிப்பு

தந்தை பெரியார் நினைவு நாள் திமுகவினர் அனுசரிப்பு
X
பெரியார் மறைந்த51வது நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
தந்தை பெரியாரின் 51 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு செம்பனார் கோவிலில் உள்ள பெரியார் திருவுருவ சிலைக்கு திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:- தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினம் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் கீழ முக்கூட்டில் உள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர். திமுகவினர் ஏராளமானோர் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் பெரியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
Next Story