வீடு புகுந்து திருடிய பிரபல கொள்ளையர்கள் கைது

மயிலாடுதுறை மாவட்டம் அரும்பாக்கத்தில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து 19 பவுன் தங்கநகையை கொள்ளையடித்த கும்பலை மயிலாடுதுறை தனிப்படை போலீசார் கைது செய்தபோது தப்பிக்க முயன்று வழுக்கி விழுந்ததில் கும்பலின் தலைவனுக்கு மாவுகட்டு போட்டு நான்குபேரை பெரம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த போலீசார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் மயிலாடுதுறையில் புதிதாக வாங்கிய வீட்டில் பால்காய்ச்சி சில நாட்கள் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி அரும்பாக்கத்தில் உள்ள வீட்டின் முன்பக்த கதவை உடைத்து மர்ம நபர்ககள் பீரோவில் இருந்த 19 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது. இது குறித்து கார்த்திகேயன் பெரம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நாகவல்லி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்ட தனிப்படை போலீசார் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் போலீசார் சிசிடிவி பதிவு மற்றும் அப்பகுதியில் செல்போன் எண்களை கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் காரைக்கால் மங்கைநல்லூர் சாலையில் தனிப்படை போலீசார் அரும்பாக்கம் பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த காரை நிறுத்தியபோது அதில் வந்த 3 பேர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர். தப்பியோடியபோது அரும்பாக்கம் சட்ரசில் தடுமாறி வழுக்கி விழுந்ததில் தென்காசி விஸ்வநாதபுரத்தை சேர்ந்த அஜ்மீர்31 என்பவருக்கு வலதுகை எலும்பு முறிவு ஏற்பட்டது. 3 பேரையும் கைது செய்து அஜ்மீருக்கு மாவுகட்டு போட்டு விசாரணை செய்ததில் தென்காசி, மதுரை, ஈரோடு, திருவாரூர் மாவட்டம் பேரளம், காரைக்கால் நிரவி போன்ற பல்வேறு மாவட்டங்களில் அஜ்மீர் மீது 16 திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. காரைக்கால் மாவட்டம் நிரவியில் மனைவியின் வீடு உள்ள நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் நிபந்தனை ஜாமினீல் கையெழுத்திட மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் தங்கியிருந்த அஜ்மல் சிறைதொடர்பு நன்பர்களான திருவாரூர் மாவட்டம் இளமங்களத்தை சேர்ந்த பிரதாப்(22), சேந்தங்குடி மணக்காரமேலத்தெருவை சேர்ந்த கரண்(22), தென்காசி செங்கோட்டையை சேர்ந்த கூட்டாளி இஸ்மாயில் ஆகியோர் கூட்டாக காரில் சென்று பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டம் விட்டு இரவில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. அஜ்மல், பிரதாப், கரண், ஆகிய 3 பேரும் கார்த்திகேயன் வீட்டில் நகைகளை கொள்ளையடித்ததும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்த கூட்டாளி இஸ்மாயில் பெரம்பூர் பகுதியில் ஒருகடையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் இஸ்மாயிலை கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து கொள்ளையடித்து உருக்கி வைக்கப்பட்டிருந்த 19 பவுன் தங்க நகை மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய ஒரு சொகுசு கார், ஒரு பைக் ஆகியவற்றை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து நால்வரையும் பெரம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதில் பிரதாப் மீது திருட்டு மற்றும் நகைக்காக கொலைமுயற்சி உள்ளிட்ட 12 வழக்குகள், கரன்மீது 3 வழக்குகள், இஸ்மாயில் மீது 6 வழக்குகள் உள்ளது. இன்ஸ்பெக்டர் நாகவல்லி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story