பெஞ்சல் புயலால் எதிர்பார்த்த பாதிப்பு இல்லை இயற்கைக்கு நன்றி மாவட்ட ஆட்சியர்

பெஞ்சல் புயலால் எதிர்பார்த்த பாதிப்பு இல்லை இயற்கைக்கு நன்றி மாவட்ட ஆட்சியர்
X
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மழையால் . எதிர்பார்த்த பாதிப்பு இல்லை என்பதால் முதலில் விவசாயிகள் இயற்கைக்கு நன்றி சொல்லுங்கள். 20ஆயிரம் ஹெக்டேர் பாதிக்கப்பட்டுள்ளது. முழுமையாக கணக்கெடுப்பு செய்து உரிய ந்வடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தகவல்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் தாலுக்கா பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களை கோரிக்கைகளை தெரிவித்தனர். கோயில் மற்றும் தொண்டு நிறுவன இடங்களை நிர்வகிப்பதாக கூறி மோசடி செய்தவர் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டும் தற்போது வரை நடவடிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் 20 வருட வழக்கு என்று சொல்கிறீர்கள் நீதிமன்றத்தை நாடி தீர்வு கண்டிருக்கலாம். மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பார் என்றார். இளம்பருதி என்ற விவசாயி மழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பேசிய நிலையில் இடைமறித்த மாவட்ட ஆட்சியர் மயிலாடுதுறை மாவட்டம் பெஞ்சல் புயலால் பாதிப்பிற்கு உள்ளாகும் என்று அச்சத்தில் இருந்த நிலையில் பாதிப்பு ஏற்படாமல் தப்பி உள்ளோம். பாதிப்பு உள்ளது பெரிய அளவில் பாதிப்பில்லாமல் தப்பியதற்கு முதலில் விவசாயிகள் இயற்கைக்கு நன்றி சொல்லுங்கள் என்றார். கடந்த ஆண்டு 112 சென்டிமீட்டர் மழை பெய்ததாகவும் இந்த ஆண்டு 140 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளதாகவும், 20000 ஹெக்டேர் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று வேளாண்துறையில் சொல்லப்பட்டுள்ளது. மீண்டும் கணக்கெடுப்பு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்தார். மேலும் இந்த கூட்டத்தில் சாலை வசதி அடிப்படை வசதி உள்ளிட்டவை செய்தி தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகளிடம் விவசாயிகள் குறைகளை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
Next Story