மறைந்த தேமுதிக தலைவருக்கு நினைவஞ்சலி
Mayiladuthurai King 24x7 |28 Dec 2024 4:02 AM GMT
மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மயிலாடுதுறையில் பல்வேறு பகுதிகளில் நடந்தது
. தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஓராண்டு நாளை டிசம்பர் 28ம் தேதி நிறைவு பெறுகிறது. அவரது நினைவு நாள் கேப்டன் ஆலயத்தில் குருபூஜையாக அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் ஜலபதி அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்றே கேப்டன் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை ஊராட்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் பாக்கம் சிவா ஏற்பாட்டில் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் மாப்படுகை அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி ஜெயக்குமார் மற்றும் ஜோதி தேமுதிக நகர செயலாளர் பண்ணை பாலு, மாவட்டத் துணைச் செயலாளர்கள் ராஜ்குமார், கனிமொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கேப்டன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர்.
Next Story