திமுக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Mayiladuthurai King 24x7 |28 Dec 2024 4:08 AM GMT
திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக முதல்வரின் மவுனத்தை கலைத்திட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
2021 சட்டமன்ற தேர்தலில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளான புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்து வெற்றிபெற்று ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. தற்போது வரை அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தராமல் தமிழக முதல்வர் மவுனம் காத்து வருகிறார். இந்நிலையில் திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வரின் மௌனத்தை கலைத்திட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்ட துணைத் தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கலா மாவட்ட செயலாளர் இளவரசன் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் கண்டனம் உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் 21 மாத ஊதியம் மாற்ற நிலுவைத் தொகை முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக முறைப்படுத்தும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் ஊராட்சி செயலர்கள் ஊர் ஊர நூலகர்கள் எம் ஆர் பி செவிலியர்கள் கணினி உதவியாளர்கள் பல்நோக்கும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் தொகுப்பூதியம் மதிப்பூதியம் பெரும் 3.5 லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியமும் ஓய்வூதியமும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Next Story