கால்பந்தாட்ட வீராங்கனை விபத்தில் பலியான குடும்பத்திற்கு எம் எல் ஏ நிதி உதவி

தரங்கம்பாடி அருகே சாலை விபத்தில் இரண்டு குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோருக்கு திமுக மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் எம்எல்ஏ ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எடுத்துக்கட்டி கிராமத்தை சேர்ந்த அந்தோணி விக்டர்ராஜ். இவரது மகள்கள் இரட்டை சகோதரிகளான பியூலா ஹான்சி, பியூலா நான்சி, மகன் அந்தோணி விக்ரந்த்ராஜ் ஆகிய மூவரும் மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க பயிற்சி பெறுவதற்காக காட்டுச்சேரி விளையாட்டு மைதானத்திற்கு டிச.24-ஆம் தேதி ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது, நேரிட்ட சாலை விபத்தில் படுகாயம் அடைந்த பியூலா நான்சி(14), மகன் அந்தோணி விக்ரந்த்ராஜ்(12) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்தில் தனது இரண்டு குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோரை அவர்களது வீட்டுக்கு மாவட்ட செயலாளர் நிவேதா எம்‌.முருகன் எம்எல்ஏ நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், அவர்களுக்கு தனது சொந்த நிதியில் ரூ.1 லட்சத்தை அவர் நிவாரணமாக வழங்கினார். இரண்டு குழந்தைகளை விபத்தில் பறிகொடுத்த தாய் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது.
Next Story