அனுமந்த்ஜெயந்தியில் தருமை ஆதீன தம்பிரான் பங்கேற்பு
Mayiladuthurai King 24x7 |30 Dec 2024 3:12 PM GMT
அனுமந்ஜெயந்தியை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே மருதூரில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை:- யானை, பசு மற்றும் குதிரைக்கு கஜபூஜை, கோ பூஜை அசுவ பூஜை நடத்தப்பட்டது.
மார்கழி மாதம், மூலநட்சத்திரம் கூடிய அமாவாசையான இன்று அனுமந்ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலை அடுத்த மருதூர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீராமவரதாஹினி மடத்தில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. முன்னதாக, காவிரிக்கரையிலிருந்து கடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்டு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீஆஞ்சநேய மூலமந்திர ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, யானை பசு மற்றும் குதிரைக்கு கஜபூஜை, கோபூஜை, அஸ்வபூஜை ஆகியன நடைபெற்றது. ஆஞ்சநேய சுவாமிக்கு விஷேச அபிஷேகம் செய்யப்பட்டு, மஹாதீபாரானை நடைபெற்றது. தொடர்ந்து இசைப்பிரியரான ஆஞ்சநேய சுவாமிக்கு சக்ரவாகம், கீரவாணி, சாமகானம், சண்முகப்பிரியா உள்ளிட்ட ராகங்களால் இன்னிசை நாதஸ்வர ஆலாபனை நடைபெற்றது. இதில் நாதஸ்வர வித்வான் விமல்ராஜ், தவில் வித்வான் வெங்கடேசன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தருமபுரம் ஆதீன மடத்தின் சார்பில், கட்டளை தம்பிரான் மாணிக்கவாசகர் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story