உத்திரபிரதேசம் சண்டிகார் மாநிலங்களில் மின்வாரியம் தனியார் மையம் மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்
Mayiladuthurai King 24x7 |31 Dec 2024 3:39 PM GMT
உத்திரபிரதேசம் மற்றும் சண்டிகார் மாநிலங்களில் மின்வாரியத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
. உத்திரபிரதேசம் மற்றும் சண்டிகர் மாநிலங்களில் மின்வாரியங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து போராடிவரும் அம்மாநில மின்வாரிய பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், மின்சார வாரியங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முயற்சியை கைவிட வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிஎன்இபி எம்ப்ளாயீஸ் பெடரேஷன் திட்ட உபதலைவர் தனசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மின்வாரிய பொறியாளர்கள், ஊழியர் சங்கத்தினர் தி;ரளாக கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story