வருடத்தின் முதல் நாள், முதல் தீர்ப்பு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை அருகே தொழில் போட்டி காரணமாக கணவனை அடித்துக் கொன்ற மனைவி உள்ளிட்ட 2 பேருக்கு ஆயுள் தண்டனை மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் புதிய ஆண்டின் முதல் நாளன்று பரபரப்பு தீர்ப்பு
. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதுப்பேட்டையை சேர்ந்தவர் மதியழகன்(48). இவர் தரங்கம்பாடியில் டெக்கரேஷன் மற்றும் மைக் செட் கடை நடத்தி வந்தார். இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி விஜயலெட்சுமி தனது மகனுடன் பிரிந்துசென்றார், மதியழகன் தான் நடத்தி வந்த டெக்கரேஷன் மற்றும் மைக் செட் கடையை தனது மனைவியிடம் ஒப்படைததுவிட்டார். பிறகு மதியழகன் புதிதாக அதே பகுதியில் வேறொரு டெக்கரேஷன் கடை புதியதாக தொடங்கியதால் விஜயலெட்சுமிக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. தொழில் போட்டியால் ஆத்திரமடைந்த விஜயலெட்சுமி தனது கணவர் மதியழகனை கொலை செய்ய முடிவு செய்து, 2019-ஆம் ஆண்டு செப்.26-ஆம் தேதி தனது அண்ணன் மகன் சத்திரியன் மற்றும் 18 வயது நிரம்பாத சிறுவனான தனது மகன் ஆகியோரை தூண்டிவிட்டார் அன்றிரவு மதியழகன் வீட்டுக்கு திரும்புகையில், வெள்ளகோவில் சுடுகாட்டு பாதை அருகில் இரும்பு பைப்பால் சத்திரியன்,(28) 18 வயது நிரம்பாத சிறுவன் ஆகிய இருவரும் மதியழகனை இரும்பு பைப்பால் அடித்து கொன்றனர். இது குறித்து பொறையார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் டாக்டர் ராம.சேயோன் ஆஜராகி வாதாடினார். குற்றம் நிரூபணமாகியதைத் தொடர்ந்து, நேற்று (2-1-25) சத்திரியன், விஜயலெட்சுமி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி, உத்தரவிட்டார். மேலும், அபராதத் தொகையாக தலா ரூ.1000 செலுத்தவும், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை என தண்டனை விதித்து தீர்ப்பளித்தார இதைத் தொடர்ந்து, விஜயலெட்சுமி (48), சத்திரியன் (33) ஆகியோரை திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். 2025 ஆம் ஆண்டில் நீதிமன்றம் திறந்த முதல் நாள் அன்றே முதல் தீர்ப்பில் ஆயுள் visual தண்டனை வழங்கிஉள்ளதது
Next Story