செம்பனார்கோயில் ஒன்றியத்தில் பல்வேறு அரசு கட்டடங்கள் திறப்பு

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் பல்வேறு கட்டிடங்கள் திறப்பு விழா
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 4 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது காட்டுச்சேரி, எடுத்துக்கட்டி, எரவாஞ்சேரி, நல்லாடை, நெடுவாசல், ஈச்சங்குடி, கீழ்மாத்தூர், மாமாக்குடி, மருதம்பள்ளம், ஆறுபாதி, உட்பட பல்வேறு பகுதிகளில் கிராம ஊராட்சி செயலகம், நியாய விலை கடை, அங்கன்வாடி கட்டிடம், பேருந்து நிழற்குடை, பள்ளி வகுப்பறை உள்ளிட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து குத்து விளக்கேற்றி வைத்து விழாவில் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அப்துல் மாலிக், அன்பழகன்,அமுர்த விஜயகுமார், மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் பாஸ்கர், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story