சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள்

செம்பனார்கோயில் காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் 500 மாணவ- மாணவிகள் பங்கேற்ற போட்டியை பூம்புகார் எம்எல்ஏ துவங்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சிவஸ்ரீன் சிலம்பாலையம் தாய்கலை சிலம்பம் அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு சிலம்பாட்ட போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, மதுரை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 500 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம்பம், மான்கொம்பு, சுருள்வாள், வால்வீச்சு போட்டிகள் நடத்தப்பட்டன. தலைவர் ஐஸ்வர்யா போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Next Story