முன்னாள் ராணுவத்தினரின் குடும்பங்கள் மாவட்ட தலைநகரிலலேயே வைத்தியம் பார்க்க கோரிக்கை
மயிலாடுதுறையில் நடைபெற்ற முன்னாள் ராணுவத்தினர்கள் நலச்சங்க ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் ராணுவத்தினர்களின் குடும்பங்கள் மருத்துவ சிகிச்சைபெற வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால் மயிலாடுதுறையில் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுபப்து உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
மயிலாடுதுறையில் முன்னாள் ராணுவத்தினர்கள் நலச்சங்க ஆலோசனைக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் முன்னாள் படைவீரர்கள் நல அலுவலரை நியமிக்கவும், அதற்கான அலுவலகம் அமைத்துகொடுக்க மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொள்வது, பென்ஷன்தாரர்கள் குறைத்தீர்கூட்டம் ஆண்டிற்கு மூன்றுமுறை மயிலாடுதுறையில் நடத்த கேட்டுக்கொள்வது, முன்னாள் ராணுவத்தினர்கள் அவரது குடும்பத்தினர் மருத்துவ சிகிச்சை பெற கும்பகோணம், நாகப்பட்டினம் போன்ற ஊர்களுக்கு செல்ல வேண்டியிருப்பதால் மயிலாடுதுறையில் அவர்கள் சிகிச்சை பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திகொடுக்க வேண்டும், முன்னாள் படைவீரர்களுக்கான கேன்டீன் மயிலாடுதுறையில் தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story




